துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது.
நீண்ட நாட்களாகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்ததால், ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, விடாமுயற்சி திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாம். மேலும், மூன்றே ஷெட்யுல்களில் படத்தை முடிக்கவும் படக்குழுவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.
அனைத்து பணிகளிலும் முடிந்த பிறகு, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.