பல்வேறு தடைகள்.. இறுதியில் முடிவுக்கு வந்த விடாமுயற்சி!

ஆக்ஷன் திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குநர் மகிழ் திருமேனி, தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம், தொடர் பிரச்சனைகளை சந்தித்து வந்தது. குறிப்பாக, பெரிய ஹீரோ படங்களுக்கு நடக்காத பட்ஜெட் சம்பந்தமான பிரச்சனைகளும், இப்படத்திற்கு ஏற்பட்டது.

இதனால் படம் தொடர்பான எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல், ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், பல்வேறு சோதனைகளை கடந்து, அஜர்பைஜானில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, படக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News