விடாமுயற்சியின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி அஜர்பைஜானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு நிலவும் உள் நாட்டு பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு இன்னும் தொடங்கபடவில்லையாம்.
இதையடுத்து, கோவை ரயில் நிலையம் அருகே அஜித் ரசிகர்களால் ஒட்டப்பட்ட்டுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது அந்த போஸ்டரில், “AJITH SIR…. உங்கள் வருகையும் சரி… எங்கள் கொண்டாட்டமும் சரி… சற்று தள்ளி போகலாம் ஆனால் ஒரு போதும் குறையாது… விடாமுயற்சி வருக வெல்க…” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரையில் எவராலும் எப்போதும் தல-யை அசைக்க முடியாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
