மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி உருவாக உள்ளது. நீண்ட நாட்களாகியும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதற்கு, அஜித் மேற்கொண்ட ஐரோப்பா சுற்றுப்பயணமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அஜித் நேற்று சென்னை திரும்பி உள்ளார். இதனால் விடா முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கப்படாவிட்டால், படத்திலிருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.