மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில் அஜித் நடிக்க இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் படத்தை பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, விடாமுயற்சியின் படப்பிடிப்பு இன்று தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து துபாய், அபுதாபி, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். நிஜமா தான் சொல்றிங்களா? உண்மையாவே ஷூட்டிங் தொடங்கியாச்சா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.