தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்கும் விவகாரம் தமிழக முழுவதும் பேசு பொருளாக மாறிவிட்டது.
ஒவ்வொரு மதுபான கடைகளிலும் கூடுதலாக பத்து ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் வாங்கி சென்ற மது பிரியர்கள் தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளில் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இருந்தாலும் டாஸ்மாக் ஊழியர்கள் இதையெல்லாம் சட்டை செய்வதில்லை. பத்து ரூபாய் பாட்டிலுக்கு கூடுதலாக வாங்கிக் கொண்டுதான் மது பாட்டில்களை கொடுக்கிறார்கள் என மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இந்நிலையில் தாம்பரம் – மதுரவாயில் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலையில், திருநீர்மலை அருகே உள்ள காமராஜபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான கடையில் வாடிக்கையாளரிடம் விற்பனையாளர் பத்து ரூபாய் அதிகம் கேட்ட பொழுது அவர் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
எம்ஆர்பி ரேட்ட எப்ப கண்டுபிடிச்சீங்க
இவ்வளவு நாளா சொல்லாம கொள்ளாம வாங்கிட்டு போனீங்க
இப்ப ஒரு வாரமா கேள்வி கேக்குறீங்க
இது ஒன்னும் ஆர்லிக்ஸ் போர்ன் வீட்டா இல்ல
பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா தான் கொடுக்கணும்
அவன் மாட்டிக்கிட்டான். அதனால மாட்டி விட்டுட்டான். மொத்த காசும் அவன் தான் வாங்கிட்டு போயிடுறான் என அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக ஒருமையில் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்கும் விவகாரம் – அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக பேசும் வீடியோ#RajNewsTamil #Tasmac #TamilNadu #SenthilBalaji pic.twitter.com/otuZJQVh0E
— Raj News Tamil (@rajnewstamil) June 10, 2023