இனிமே இது ஜட்டி கிடையாது.. டீ சர்ட்.. – சிரிப்பை ஏற்படுத்திய இளைஞர்களின் புதிய உடை..

உர்ஃபி ஜாவத் என்ற பிரபலம் ஒருவர், வித்தியாசமான ஆடைகளை அணிவதில் வல்லவர். சில சமயங்களில், சாக்கை ஆடையாக அணிவார், சில சமயங்களில் குளிர்பானங்கள் குடிக்க உதவும் ஸ்ட்ராவை உடையாக அணிவார்.

இவ்வாறு ஆடைகள் அணிவதால், இணையத்தில் பெரும் வெறுப்பை அவர் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால், ஒருசில நெட்டிசன்கள், உர்ஃபி ஜாவத்தை ஒரு முன் உதாரணமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படியான இளைஞர்கள், செய்துள்ள லூட்டி தான், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அதாவது, மிஸ்டர் ரகு என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், ஆண்கள் அணியும் உள்ளாடையை, டீ-சர்ட்டாக மாற்றி, உடுத்தியுள்ளனர். இந்த வித்தியாசமான ஆடையை அணிந்துக் கொண்டு, மிகவும் தன்னம்பிக்கையுடன், அவர்கள் மார்கெட்டில் நடந்து செல்கின்றனர்.

இவர்களது, இந்த உடையை பார்த்த சில பெண்களும், பொதுமக்களும், சிரிக்கின்றனர். இந்த வீடியோ தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை சில நெட்டிசன்கள் விமர்சித்தாலும், பலர் சிரித்து மகிழ்ந்துள்ளனர். இதுவரை, 8.4 லட்சம் பார்வையாளர்களும், 24 லட்ச லைக்ஸ்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களும், இந்த பதிவுக்கு கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News