Connect with us

Raj News Tamil

“அனுமதி இல்லாம எப்படி என்ன தொடலாம்” – இளைஞரை பந்தாடிய இளம்பெண்!

உலகம்

“அனுமதி இல்லாம எப்படி என்ன தொடலாம்” – இளைஞரை பந்தாடிய இளம்பெண்!

பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பது அவரவரின் உரிமை. ஆனால், அந்த உரிமையில் தலையிடும் சிலர், இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.

எது எப்படியோ, தான் எப்படி ஆடை உடுத்த வேண்டும் என்பதை, இளைஞர் ஒருவருக்கு இளம்பெண் ஒருவர், சரியான முறையில் கூறி, பாடம் புகட்டியுள்ளார்.

அதாவது, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் Youtuber ஷைலா கான், வழிப்போக்கர்களிடம், ஈரான் – இஸ்ரேல் பிரச்சனை தொடர்பாக பேட்டி எடுத்து வந்தார். அங்கிருந்த இளைஞர் ஒருவரிடமும், இதுகுறித்து பேட்டி எடுத்துள்ளார்.

கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காத அந்த இளைஞர், “நீ ஒரு இஸ்லாமிய நாட்டில் இருக்கிறாய். எனவே அல்லாவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்” என்று கூறிவிட்டு, தன்னிடம் இருந்த துண்டை எடுத்து, ஷைலாவின் தலையில் போர்த்திவிட்டார்.

இதனால் செம கடுப்பான அந்த பெண், இளைஞரை சரமாரியாக திட்டினார். மேலும், ஒரு பெண்ணின் உரிமை இல்லாமல், அவளை தொட்டிருக்கிறாய். இதுதான் உனக்கு இஸ்லாம் சொல்லிக் கொடுத்ததா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஷைலா, “உன்னுடைய இந்த நடவடிக்கையால் உன்னை கைது செய்ய முடியும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், அந்த பெண் பல்வேறு விதங்களில் பாடம் புகட்டிய பின்னரும், தனது கருத்தில் அந்த இளைஞர் மாறவே இல்லை. தான் செய்த விஷயத்தில் தவறு இல்லை என்றும் தொடர்ச்சியாக கூறினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in உலகம்

To Top