இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர் பாஜகவுடன் கூட்டணியா? – அதிர்ச்சி வீடியோ வைரல்!

உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியும், மகாராஷ்டிரா மாநில பாஜகவும், கூட்டணி அமைத்து தேர்தல் சந்தித்தன. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் அன்று, இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக் கொண்டன.

இந்நிலையில், இந்த இரண்டு கட்சிகளும், மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக, இணையத்தில் அனுமானங்கள் உருவாகியுள்ளன. அதற்கான காரணம் என்னவென்றால், உத்தவ் தாக்கரேவும், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்-ம், சகஜமாக பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்போது மழைகால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு, லிஃப்டில் செல்வதற்காக செல்லும்போது, இருவரும் சந்தித்துக் கொண்டனர். மேலும், இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

இவ்வாறு மரியாதை நிமித்தமாக இருவரும் பேசிக் கொண்ட சம்பவம், இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. “மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில், சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனையொட்டி, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்” என்று பலரும் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு இவர்கள் பதிவிடுவதற்கு, இந்த வீடியோ மட்டுமின்றி, வேறு சில காரணங்களும் உள்ளது. அதாவது, மழைக்கால கூட்டத் தொடரின், முதல் நாள் அன்று, உத்தவ் தாக்கரே சட்டமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

அப்போது, பாஜகவின் மூத்த தலைவரும், உயர் மற்றும் தொழில் கல்வியின் அமைச்சருமான சந்திரகந்த் பட்டீல், உத்தவ் தாக்கரேவை வரவேற்றார். இது லேசான சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

இதுமட்டுமின்றி, சந்திரகந்த் பட்டீலும், சிவ சேனா கட்சியின் தலைவர்களான உத்தவ் தாக்கரே, அம்பதாஸ் தன்வே, அனில் பராப் ஆகியோரும், சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின்போது, இருதரப்பும், இனிப்பை மாற்றி, மாற்றி ஊட்டிக்கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக, பாஜக தலைவர்களுடன், உத்தவ் தாக்கரே நெருக்கம் காட்டுவது, கூட்டணிக்கான அடுத்த கட்ட நகர்வா என்று புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News