வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விடுதலை 2. சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 9 நாட்களில், 49 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம். 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த வசூல் மிகவும் குறைவானது என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இசை உரிமம், தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் என்று மற்ற வருவாயை வைத்து பார்த்தால், முதலீடு செய்த பணம், திருப்பி கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும்போது, இந்த திரைப்படம், தயாரிப்பாளருக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று கூறப்படுகிறது.