Connect with us

Raj News Tamil

விடுதலை படத்தின் ரிலீஸ் அப்டேட்!

சினிமா

விடுதலை படத்தின் ரிலீஸ் அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை.

பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின், இரண்டாவது பாகம், தற்போது உருவாகி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இரண்டாம் பாக படங்களில், விடுதலை 2-வும் இருந்து வருகிறது.

ஆனால், ஒரு வருடங்கள் ஆகியும் இப்படத்தின் ஷீட்டிங் இன்னும் முடியாமல் உள்ளது. மேலும், இன்னும் 20 நாட்கள் ஷீட்டிங் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதலை படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படம், பின்னணி பணிகள் அனைத்தும் முடிந்து, வரும் ஜுன் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, இப்படத்தின் இரண்டு பாகமும் இணைந்து, ஒரே பாகமாக, 4 மணி நேரம் ஓடும் வகையில், ரோட்டர்டம் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top