விடுதலை 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி அன்று முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, நடிகர்கள் பலரும், தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
அப்போது, நடிகர் விஜய்சேதுபதியும், தனது அனுபவங்களை நீண்ட உரையாக பகிர்ந்துக் கொண்டாராம். இவரது இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளதாம். இயக்குநர் வெற்றிமாறன், கிட்டதட்ட கண்ணீர் வடித்ததாகவும், தகவல் பரவி வருகிறது.