வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் இரண்டாம் பாகம், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில், மேலும் பல நடிகர்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படத்தின் கதையை தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்வதால், பல்வேறு கதாபாத்திரங்களை, இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில், தற்போது கூடுதலாக இரண்டு கதாபாத்திரங்களை அவர் இணைந்துள்ளார். அதாவது, நடிகர் பிரகாஷ் ராஜ்-ம், விஜய்சேதுபதியின் சொந்த மகன் சூர்யாவும், இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.