விடுதலை படப்பிடிப்பில் விபத்து.. பிரபலம் மரணம்!

அசுரன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் ஸ்டன்ட் காட்சிகள், கேளம்பாக்கத்தில் நடைபெற்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, சண்டை காட்சிகள் எடுத்தபோது, ரோப் திடீரென அறுந்து விழுந்ததால், சண்டை பயிற்சியாளர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், படக்குழுவினர் இடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.