சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது.
தற்போது, இந்த படத்தின் 2-ஆம் பாகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்தின் முக்கால் வாசி ஷீட்டிங் முடிந்துவிட்டது என்று கூறப்பட்டது.
மீதமுள்ள காட்சிகளை 10 நாட்களில் எடுத்து முடித்துவிடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் மீதுள்ள சுவாரசியத்தின் காரணமாக, 100 நாட்கள் வரை ஷீட்டிங் நடத்த, வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம்.
இதன்காரணமாக, இந்த படம், 3 அல்லது 4 பாகங்கள் வரை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.