வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், கடந்த 31-ஆம் தேதி அன்று வெளியான திரைப்படம் விடுதலை. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாளில் மட்டும் 6.5 ரூபாயை இந்த படம் வசூலித்துள்ளது. இரண்டு நாட்கள் முடிவில் சுமார் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.
படத்திற்கு வரவேற்பு இருப்பதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.