நடனம் ஆடும்போது சறுக்கல்.. சூப்பராக சமாளித்த வித்யா பாலன்!

Bhool Bhulaiyaa 3 என்ற பாலிவுட் திரைப்படம், வரும் நவம்பர் 1-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ்-க்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மும்பையில், இப்படத்தின் பாடல் அறிமுக விழா நடைபெற்றது. அந்த விழாவில், அமி ஜெ தோமர் 3.0 என்ற பாடலுக்கு, வித்யா பாலனும், மாதுரி தீக்ஷித்தும், நடனம் ஆடியுள்ளனர்.

அப்போது, நடனம் ஆடிக் கொண்டு இருந்த வித்யா பாலன், திடீரென கால் சறுக்கி, கீழே விழுந்துள்ளார். ஆனால், கீழே விழுந்ததை நாசுக்காக சமாளித்த அவர், அதற்கு ஏற்ற வகையில், நடன அசைவை வெளிப்படுத்தினார்.

மேலும், நடன அசைவுகளை அவர் மாற்றியதை புரிந்துக் கொண்ட மாதுரி தீக்ஷித், அதற்கு ஏற்ற வகையில், தனது நடன அசைவையும் மாற்றிக் கொண்டார். Presence of Mind உடன், இவர்கள் இரண்டு பேரும் நடந்துக் கொண்ட விதம், அங்கிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News