தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது நாம் தமிழர் கட்சி. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இயங்கி வரும் இந்த கட்சியில், சமீப காலங்களாக, முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறு இருக்க, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வீரப்பனின் மகளான வித்யா, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இணைந்து ஒரு வருடங்கள் கூட இன்னும் முடிவடையாத நிலையில், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு முன்னர், வித்யா வீரப்பன், பாஜகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.