விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாண்டிச்சேரியில் உள்ள அரசு சொத்தை வாங்குவதற்கு நான் முயற்சி செய்தேன் என்று, அபத்தமான செய்தி ஒன்று பரவி வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். என்னுடைய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெணி’ படத்தின் படப்பிடிப்புக்காக, விமான நிலையத்தில் அனுமதி வாங்குவதற்காக, நான் பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தேன்.
மரியாதையின் நிமித்தமாக, முதலமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சரை சந்திக்க நேர்ந்தது. எதிர்பாரா விதமாக, சந்திப்புக்கு பிறகு, என்னுடன் வந்த உள்ளூர் மேலாளர், சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் விசாரித்தார்.
அதுதான், தற்போது தவறுதலாக என்னுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்பினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.