துணிவு படத்திற்கு பிறகு, அஜித் நடிக்க இருந்த அடுத்த படத்தை, விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த வாய்ப்பு, மகிழ் திருமேனிக்கு சென்றுவிட்டது.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், அஜித்துக்கு நான் கூறிய கதை, ஆவேசம் பட பாணியில் இருக்கும்.
அந்த திரைப்படம் உருவாகியிருந்தால், வித்தியாசமான படைப்பாக அது இருந்திருக்கும் என்று தெரிவித்தார். ஆவேசம் பட பாணியில் அஜித் நடித்திருந்தால், அது அவரது புதிய நடிப்பு பரிணாமத்தை வெளிப்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.