சர்ச்சைக்கு பிறகு விக்கியின் முதல் பதிவு – ஒண்ணுமே புரியலையே!

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தற்போது இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். வாடகைத் தாய் முறையின் மூலம் இந்த குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இதுதொடர்பான விசாரணையும் அவர்களிடம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “யார் உங்களிடம் சிறப்பாக இருக்க விரும்புகிறார்களோ, அவர்கள் தான் உங்களுக்கானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள், அது தான் உண்மையும் கூட.. எல்லாம் சரியான தருணத்தில் உங்களை வந்து சேரும். அதுவரை பொறுமையுடன் நன்றியுடன் இருங்கள்” என விக்னேஷ் சிவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், எதற்காக அவர் இவ்வாறு பதிவிட்டார் என்று குழப்பத்துடன் இருந்து வருகின்றனர்.