Connect with us

Raj News Tamil

இதுதான் அஜித்தின் கடைசி திரைப்படம்!

சினிமா

இதுதான் அஜித்தின் கடைசி திரைப்படம்!

வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு, லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் அஜித் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை முடித்த பிறகு, ஒன்றரை வருடங்களுக்கு எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல், சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளாராம். அந்த ஒன்றரை ஆண்டுகளில், 180 நாடுகளுக்கு பைக்கிலேயே அஜித் பயணம் செய்ய இருக்கிறாராம். அஜித்தின் நீண்ட நாள் கனவு இது என்றும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் தான் அஜித்தின் கடைசி படமாக இருக்கலாம் என்றும், அதன்பிறகு, அவர் சினிமாவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாகவும், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். இந்த தகவல், அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top