Connect with us

Raj News Tamil

அஜித் புகைப்படத்தை பதிவிட்டு பல்பு வாங்கிய விக்னேஷ் சிவன்!

சினிமா

அஜித் புகைப்படத்தை பதிவிட்டு பல்பு வாங்கிய விக்னேஷ் சிவன்!

இயக்குநர் எச்.வினோத்தின் துணிவு படத்திற்கு பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளார். பல்வேறு பிரம்மாண்ட படங்களை தயாரித்த லைக்கா புரொடக்ஷன் தான், இந்த படத்தையும் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித் குழாயில் தண்ணீர் குடிக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதற்கு சிலர் விமர்சனம் செய்தும், சிலர் ஆதரவு தெரிவித்தும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த கமெண்ட்ஸ்களுக்கு இடையே, நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்ட்ஸ் கவனம் பெற்றுள்ளது. அதில், உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்.. மங்காத்தாவை விட மாஸான திரைப்படத்தை உங்களால் எடுக்க முடியாது.

நயன்தாரா மற்றும் அனிருத் இல்லாமல், உங்களால் படம் எடுக்கவே முடியாது. உங்களுடைய பெரும்பாலான படங்களை, அனிருத் தான் காப்பாற்றியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top