வெச்சி செய்த விஜய் ரசிகர்கள்! நொந்து போன விக்னேஷ் சிவன்!

விஜயிக்கும், லோகேஷ் கனகராஜிக்கும் லியோ படப்பிடிப்பின்போது, தகராறு ஏற்பட்டதாக, சமீபத்தில் செய்தி ஒன்று பரவி வந்தது.

இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, விஜய்-க்கும், லோகேஷ்-க்கும் சண்டை இருப்பதாக வெளியான செய்திக்கு, விக்னேஷ் சிவன் லைக் போட்டுள்ளார்.

இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், விக்னேஷ் சிவனை வறுத்தெடுத்து வந்தனர். இதையடுத்து, தவறை உணர்ந்த விக்னேஷ் சிவன், தனது லைக்கை நீக்கினார். இருப்பினும், விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தனர்.

இதனால் நொந்து போன விக்னேஷ் சிவன், அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“இனிய விஜய் ரசிகர்களே, லோகேஷ் கனகராஜின் ரசிகர்களே, இந்த குழப்பத்திற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் லோகேஷ் கனகராஜின் தீவிர ரசிகன்.

அதனால், உணர்ச்சியின் வேகத்தில், அவரது புகைப்படத்தை பார்த்த உடனே, அந்த பதிவுக்கு லைக் போட்டுவிட்டேன். ஆனால், நான் அந்த வீடியோவில் என்ன செய்தி இருந்தது என்பதை பார்க்கவேயில்லை.

இது என்னுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட சிறிய தவறு தான். எனவே என்னை மன்னித்துவிடுங்கள்.

எனவே, என்னுடைய இந்த சிறிய தவறை பற்றிக் கமெண்ட் பதிவிடுவதற்கு பதில், தளபதி விஜயின் லியோ படத்தை கொண்டாடுவதற்கு தயாராகுங்கள்”

இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News