அஜித்தின் AK- 62 குறித்து விக்னேஷ் சிவன் பெருமிதம்..!

எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின், இறுதிகட்ட படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK- 62 படத்தில் நடிக்கவுள்ளார், மேலும் இதற்கான நடிகர்கள் தேர்வும் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. இது குறித்து பேசிய விக்னேஷ் சிவன், இந்த படத்தின் கதையில், முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இது உங்கள் படம் நீங்கள் விரும்பியதை செய்யக்கூடிய சுதந்திரம் AK- 62 உள்ளது என்றும், எவ்வித அழுத்தமும் கிடையாது என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்