இதுவரை மோதிய விஜய் -அஜித் படங்கள்! யாருக்கு அதிக வெற்றி?

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதால், யார் படம் வெற்றி பெறும் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல.. பலமுறை அஜித்தின் படமும், விஜயின் படமும் ஒரே நேரத்தில் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருக்கிறது. இதில், எந்த படம் வெற்றியை பெற்றது என்று தற்போது பார்க்கலாம்..?

2001-ஆம் ஆண்டு அன்று பிரண்ட்ஸ் திரைப்படமும், தீனா திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. இதில், இரண்டு திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, 2006-ஆம் ஆண்டு அன்று, பரமசிவன் திரைப்படமும், ஆதி திரைப்படமும் வெளியானது. ஆனால், இந்த முறை, இரண்டு திரைப்படமும் படுதோல்வி அடைந்தது.

பின்னர், 2007-ஆம் ஆண்டு அன்று, போக்கிரி திரைப்படமும், ஆழ்வார் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகின. இந்த முறை, விஜயின் போக்கிரி திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால், அஜித்தின் ஆழ்வார் திரைப்படம் படுதோல்வி சந்தித்தது.

இதையடுத்து, 2014-ஆம் ஆண்டு அன்று, ஜில்லா திரைப்படமும், வீரம் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. இந்த முறை, இரண்டு பேரின் திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றது. இவ்வாறு இருக்க, இந்த முறை எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..