அஜித் வில்லன்.. விஜய் ஹீரோ.. மிஸ்ஸான ப்ளாக் பஸ்டர் படம்!

தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்கள் என்றால் அது அஜித்தும், விஜயும் தான். இவர்கள் இருவரும், ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன்பிறகு, இருவரும் ஒன்றாக இணைவார்களா என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்து வருகின்றனர்.

இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு இருக்க, அஜித் வில்லனாக, விஜயை ஹீரோவாக வைத்து, இயக்குநர் ஜெயம் ராஜா திரைப்படம் ஒன்றை எடுக்க இருந்தாராம்.

ஆனால், அந்த படத்தில் இருவரும் நடிக்க முடியாமல் போனதால், ஜெயம் ரவியையும், அரவிந்த் சாமியையும் வைத்து, தனி ஒருவன் என்ற பெயரில், அவர் எடுத்திருந்தார். இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.