விஜய்க்கு ட்விஸ்ட் கொடுத்த ஆண்டவர்!

வாரிசு படத்திற்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில், விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தை, கமல் ஹாசனும், இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கமல் இந்த படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கமல் போட்ட பெரிய ப்ளான் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, விஜய் படத்தில் கமல் நடிப்பதை போல, கமல் படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். இதற்காக தான், விஜய் படத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

விக்ரம் படத்தின் பெரிய வெற்றிக்கு, ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்ததும் காரணம் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்க, கமல் படத்தில் விஜய் நடித்தால், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில், ஐயமில்லை.