Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மட்டமான வார்த்தைகளால் திட்டிக்கொள்ளும் விஜய்,ரஜினி ரசிகர்கள்..!

சினிமா

மட்டமான வார்த்தைகளால் திட்டிக்கொள்ளும் விஜய்,ரஜினி ரசிகர்கள்..!

கோலிவுட்டின் டாப் நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி,கமல்,விஜய் மற்றும் அஜித். அண்மைகாலமாக இவர்களின் ரசிகர்கள் மத்தியில் யார் சூப்பர் ஸ்டார் என்ற சலசலப்பு பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் விஜய்யின் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று புகழ்ந்து பேசினார். இதற்கு விஜய்யும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தது, மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது. அதாவது தளபதி விஜய் அதிகமாக ரீமேக் படங்களில் நடித்து வருவதாக, ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

போக்கிரி படம் தொடங்கி கில்லி, நண்பன் என பல்வேறு ரீமேக் படங்களில் நடித்து வருவதால், இவரை ரீமேக் ஸ்டார் என்றும் கடுமையான வார்த்தைகளாலும் ரஜினி ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். இதேபோன்று விஜய் ரசிகர்களும் ரஜினியை படுகேவலமான வார்த்தைகளால் பதிலுக்கு கேலி செய்து வருகின்றனர். மேலும் கோலிவுட்டின் கிங் தளபதி என்று விஜய் ரசிகர்களும், கோலிவுட்டின் பிரைடு ரஜினி தான் என்ற ஹாஷ்டேகையும் அவரது ரசிகர்களும் ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர். இதனால் இணையவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top