கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளவர் நெல்சன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் காரணமாக, அவரது அடுத்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், விஜய் மற்றும் ரஜினியை வைத்து புதிய படம் இயக்கும் ஐடியா ஒன்று உள்ளது. அதற்கு ஏற்றார்போல் கதை அமைந்தால், அந்த படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நெல்சன் பேசியிருப்பது, சினிமா தரப்பினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல், உண்மையாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக அது இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.