விஜய்யின் வாரிசு படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இதற்கிடையில், நடிகர் ஷாம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைதராபாத் செட்டில் விஜய்யுடன் மின்சார வாகனம் ஒன்றில் ஜாலியாக பயணித்த வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜாலியாக வண்டியை ஓட்டிய விஜய், சிரித்த முகத்துடன் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டர். நடிகர் ஷாம் இதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘ரூ. 210 கோடி 7 நாட்கள்’ என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.