விஜய்-க்கும் விஷாலுக்கும் சண்டை! துணிவு தான் காரணம்!

விஜயின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில், பலரும் உள்ளனர்.

இந்நிலையில், துணிவு படத்தின் மீதுள்ள போட்டியால், விஜய்-க்கும், விஷாலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம். அதாவது, துணிவு படத்திற்கு போட்டியாக, சத்தியம் தியேட்டர் வளாகத்தில், விஜயின் ப்ளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இடத்தில், விஷாலின் லத்தி பட ப்ளக்ஸ் தான் இருந்ததாம். இதுகுறித்து, விஷாலுக்கு தெரியப்படுத்தாமலே, லத்தி பட ப்ளக்ஸை தூக்கிவிட்டு, வாரிசு பட ப்ளக்ஸை வைத்துள்ளனர். இதனை அறிந்த விஷால், செம டென்ஷன் ஆகிவிட்டாராம்.