வாரிசு படக்குழுவை கடுமையாக திட்டிய தளபதி!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்ததால், வாரிசு திரைப்படத்தை வெற்றி படமாக்கும் முயற்சியில் விஜய் இருந்து வருகிறார்.

இந்நிலையில், வாரிசு படக்குழுவினரை விஜய் கடுமையாக திட்டியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வாரிசு படத்தின் பாடல் காட்சி ஒன்று வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வீடியோவை பார்க்கும்போது, செட்டின் மேலே இருந்து எடுப்பதாக தெரிகிறது.

எனவே, லைட்மேன்கள் தான் யாரே இவ்வாறு வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக, லைட்மேன்கள் உள்ளிட்ட படக்குழுவினரை விஜய் கடுமையாக திட்டியுள்ளாராம். இவ்வளவு கோபமாக விஜயை இதுவரை பார்த்ததில்லை என்றும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.