இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, தற்போது ஹீரோவாக நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா, பிரபல தனியார் பள்ளி ஒன்றில், 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு, மின்விசிறியில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மீராவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் தந்தையும், தற்கொலை செய்துக் கொண்டதாக, பழைய வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் பேசியிருப்பது பின்வருமாறு:-
“எனக்கு 7 வயதாக இருக்கும்போது, என் தந்தை தற்கொலை செய்துக் கொண்டார். அதன்பிறகு, என் தாய் தனி ஆளாக இருந்து, என்னையும், என் தங்கையையும் படிக்க வைத்து, ஆளாக்கினார்.
வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு துயரம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், அதற்காக தற்கொலை செய்துக் கொள்ளாதீர்கள்.” என்று அறிவுரை கூறியிருந்தார்.
இவ்வாறு கூறிய இவரின் மகளே தற்கொலை செய்துக் கொண்டுள்ளாரே என்று, நெட்டிசன்கள் பலரும் சோகத்துடன் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.