அட்லியின் வாரிசு விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்..!

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பின்னர் விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை பிரியாவை காதலித்து கரம்பிடித்தார்.

தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜவான் படத்தை இயக்கிவரும் அட்லி, கடந்த வாரம் மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக டிவிட்டரில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அட்லி – பிரியா தம்பதியினருக்கு இன்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் ஆளாக தளபதி விஜய் கலந்து கொண்டு வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.