Connect with us

Raj News Tamil

ரஜினியை ஒதுக்கிய விஜய் – பரபரக்கும் கோலிவுட்..!

சினிமா

ரஜினியை ஒதுக்கிய விஜய் – பரபரக்கும் கோலிவுட்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையருங்குகளில் வெளியாகவுள்ளது. ஆயுத பூஜை அன்று வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்து தகவல் கசிந்துள்ளது. அதாவது, விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கமல்ஹாசன், விக்ரம் மற்றும் தனுஷ் ஆகிய மூவரையும் அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மூவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அறிந்த நெட்டிசன்கள், கமல், விக்ரம், தனுஷை அழைத்தவர்கள் ஏன் ரஜினியை மட்டும் விழாவிற்கு அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top