லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வந்த இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் மூலம், ரஜினிகாந்தின் மார்கெட்டை விஜய் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினியின் கேரள ரைட்ஸ் ரூபாய் 4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், விஜயின் லியோ கேரள ரைட்ஸ், 15 கோடி ரூபாய்-க்கு மேல், விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதன்மூலம், ரஜினியை விஜய் முந்தியுள்ளதாக, இணையத்தில் கூறப்பட்டு வருகிறது.