Connect with us

Raj News Tamil

ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

தமிழகம்

ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top