விஜயின் அதிரடி முடிவு – குவியும் பாராட்டு!

விஜயின் 67 வது திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தான் இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில், விஜயின் சம்பளம் ரூபாய் 150 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 125 கோடி ரூபாய் மட்டுமே விஜய் சம்பளமாக பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம், கோவிட் தொற்று காலத்தில் வெளியானதால், லலித் குமாருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், இவர் சமீபத்தில் தயாரித்திருந்த கோப்ரா திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. எனவே, லலித்குமாருக்கு உதவி செய்யும் வகையில் விஜய் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். இதேபோன்று, லோகேஷ் கனகராஜ்-ம் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளார்.