Connect with us

Raj News Tamil

சொன்னதை செய்த விஜய் தேவரகொண்டா ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா

சொன்னதை செய்த விஜய் தேவரகொண்டா ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘குஷி’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூலை குவித்தது வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, எனது சம்பளத்தில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் 100 குடும்பங்களுக்கு கொடுப்பேன் என்றும் இந்த தொகை ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சொன்னது போல 100 குடும்பங்களுக்கு ஒவ்வொரு லட்சமாக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top