விரைவில் அரசியல்? விஜயின் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரது திரைப்படங்கள் பிரச்சனையில் சிக்குவது, கடந்த 10 வருடங்களாக நடந்து வருகிறது. தற்போது கூட, வாரிசு படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற நிலை உள்ளது.

இவ்வாறு, ஒவ்வொரு படங்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு, விஜய் அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். அதாவது, தளபதி விஜய், விரைவில் அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக தான், தனது ரசிகர்களை அழைத்து, விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, சில முன்னணி பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல், சினிமா வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.