ரசிகர்களின் மோசமான செயல்! தலை குணிவை சந்தித்த விஜய்!

வாரிசு படப்பிடிப்பில், யானைகள் பயன்படுத்தப்பட்டதாக, தகவல் ஒன்று பரவி வந்தது. இதனை அறிந்த செய்தியாளர்கள் சிலர், அங்கு சென்று, இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், இதற்கு பதில் அளிக்காத படக்குழுவினர், செய்தியாளர்களை விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், செய்தியாளர்களை காரில் கடத்தி சென்று, அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் பலத்தை, விஜய் துஷ்பிரயோகம் செய்வதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்த பிறகும், விஜய் இதுகுறித்து பேசாமல், மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.