புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனை ஒன்றில் போதிய அளவில் ரத்தம் இருப்பு இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

அரசு மருத்துவமனையில் ரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் ரத்த வங்கியில் ரத்தம் கொடுத்தனர். இதற்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் காலை முதல் 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
ரத்தம் வழங்கிய 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களுக்கு விஜய் மன்றம் சார்பாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.