தெலுங்கு இயக்குனர் வம்சி, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. நாளை வெளியாகவுள்ள இப்படத்தின், ப்ரீ புக்கிங் ஜெட் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும் வெளியாக இருப்பதால், திரையரங்கு வளாகத்தில் பேனர், கட் அவுட் போன்ற விளம்பர பதாகைகள் வைக்க ரசிகர்களிடம் போட்ட போட்டி ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பட்டுக்கோட்டை விஜய் மக்கள் மன்ற இயக்கத்தினர், வாரிசு படம் பார்ப்பதற்கு பத்திரிகை வைத்து அஜித் ரசிகர்களை அழைத்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதனை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.