Connect with us

Raj News Tamil

வாரிசு படம் வெற்றியடைய வேண்டி தோப்புக்கரணம் போட்ட விஜய் ரசிகர்கள்..!

சினிமா

வாரிசு படம் வெற்றியடைய வேண்டி தோப்புக்கரணம் போட்ட விஜய் ரசிகர்கள்..!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்த படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. படத்திற்கு புரோமொஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வாரிசு படம் வெற்றியடைய வேண்டி விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறை மாவட்டம் மாயூரநாதர் ஆலயத்துக்கு வாரிசு பட போஸ்டருடன் வந்து வழிபாடு நடத்தினர்.

இதனையடுத்து விநாயகர் சன்னதியில் 108 தோப்புக் கரணம் போட்டு வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கி படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு நடத்தினர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top