அஜித்தை சீண்டிய விஜய் ரசிகர்கள்..!

வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின், இறுதிகட்ட படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவில் அஜித்தை சீண்டும் வகையில்,ஒருமையில் விமர்சிக்கும் வகையிலும் விஜய் ரசிகர்கள் பேனரை கையில் வைத்துள்ளனர். தற்போது இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.