விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பது மட்டுமின்றி, அரசியல் ஆர்வமும் அதிகம் கொண்டவராக உள்ளார்.

இதுமட்டுமின்றி, விரைவில் அரசியல் கட்சியை இவர் தொடங்க இருப்பதாகவும், கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயின் ரசிகர்கள், அவரது அரசியல் கனவை பிரதிபலிக்கும் வகையில், போஸ்டர் ஒன்றை அடித்துள்ளனர்.

அந்த போஸ்டரில், “தம்பி பொறுத்தது போதும்.. வா தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது.. நாளைய முதல்வர் நீயே” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பையும் இந்த புகைப்படம், ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News