அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஒரே நாளில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில், அவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக் கூறினார்.
ஆனால் கொரனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், ஒரு நாள் மட்டும் நடித்துவிட்டு பின்னர் அதிலிருந்து விலகிவிட்டேன் எனக் வெளிப்படையாக தெரிவித்தார். இதையடுத்து அஜித்துக்கு அம்மாவாக நடிகை சுமித்திரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.