இயக்குனராக மக்கள் மனதை கவர்ந்தவர் இப்போது பல படங்களில் நடித்து நடிகராகவும் அசத்தி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இவர், தற்போது விஜயின் லியோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனனிடம், விஜயுடன் அறிவிக்கப்பட்ட யோஹன் அதிகாரம் படத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய்தான் இது குறித்து சொல்ல வேண்டும் என்றும் கதையும் தயாராக தான் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், லியோவில் விஜயுடன் செலவழித்த நாட்களை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.