Connect with us

Raj News Tamil

இனிமே இந்த மாதிரி பெயர் வச்சா விஜய் படம் ஓடாது – பீதியில் விஜய் ரசிகர்கள்

சினிமா

இனிமே இந்த மாதிரி பெயர் வச்சா விஜய் படம் ஓடாது – பீதியில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக் கணகக்கான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘லியோ’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் படத்தின் டைட்டில் குறித்து வெளியாகியுள்ள சென்டிமென்ட் தகவல் ரசிகர்களை பீதியடைய செய்துள்ளது. அதாவது விலங்குகள் மற்றும் பறவைகள் பெயரில் வெளியாகும் விஜய் படங்கள் தோல்வியை சந்திக்கும் என்பதுதான் அந்த சென்டிமென்ட் தகவல்.

2008ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான ‘குருவி’ திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெளியான சுறா படமும் பெரும் தோல்வியை சந்தித்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்தப் படமும் ஃபிளாப் ஆனது. கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படமும் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்தது.

இப்படி விஜய் நடிப்பில் விலங்குகள் மற்றும் பறவைகள் பெயரில் வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் 67 படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. லியோ என்றால் தமிழில் சிங்கம் என்பதால் என்னவாகுமோ என விஜய் ரசிகர்கள் பீதியில் உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top